Varisu: தில் ராஜு சொல்வதை பார்த்தால் வாரிசு பற்றி வம்சி சொன்னது பொய்யா?!

Vamshi Paidipally: வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் லேட்டஸ்ட் பேட்டியை பார்த்தவர்கள், இயக்குநர் வம்சி பைடிபல்லி பொய் சொல்லிடாரா என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வாரிசுவம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், அவரின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் ஜனவரி 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்த பொங்கல் தளபதி பொங்கல் என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் வாரிசு படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டி வீடியோ வைரலாகிவிட்டது.
மகேஷ் பாபுவாரிசு படக் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் சொன்னோம், டேட்ஸ் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதையடுத்து ராம் சரணை வைத்து வாரிசு படத்தை எடுக்க நினைத்தோம். அவரும் பிற படங்களில் பிசியாக இருந்தார். அதன் பிறகே விஜய்யிடம் கதை சொன்னதும் அவர் ஓகே செய்துவிட்டார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் தில் ராஜு.
வம்சிவாரிசு பக்கா தமிழ் படம். இது குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்று முன்பு தெரிவித்தார் வம்சி பைடிபல்லி. இந்நிலையில் தில் ராஜு கூறியதை கேட்டவர்களோ, இரண்டு முன்னணி தெலுங்கு நடிகர்கள் நடிக்க மறுத்த கதையில் விஜய்யை நடிக்க வைத்திருக்கிறார் வம்சி. அப்படி இருக்கும்போது இது பக்கா தமிழ் படம் என்று பொய் சொல்லிவிட்டாரே. தமிழ் படத்திலா மகேஷ் பாபுவை நடிக்க கேட்டிருப்பார்கள் என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தில் ராஜுதமிழகத்தில் இருக்கும் 800 ஸ்கிரீன்களில் 400ல் வாரிசு படமும், மீதமுள்ள 400ல் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார். அவர் தான் நம்பர் ஒன். அப்படி இருக்கும்போது வாரிசு படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ரெட் ஜெயன்ட் மூவீஸின் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் தில் ராஜு.Thunivu vs Varisu:அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார்: வாரிசு தயாரிப்பாளர் சொல்வது சரியா?
அஜித்அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார் என்று தில் ராஜு தெரிவித்தது சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தில் ராஜு பிசினஸ்மேன். அவருக்கு போட்ட காசை எடுக்கணும். ஆனாலும் அவர் படத்திற்கு கூடுதல் ஸ்கிரீன் வேண்டும் என்பதற்காக அஜித்தை தாக்கி பேசியது தவறு என சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். வாரிசுக்கு அதிக ஸ்கிரீன் வேண்டும் என்று துணிவு படத்தை விநியோகம் செய்பவரிடமே கேட்க சென்னை வருகிறார். வாரிசுக்கு இருக்கும் பிரச்சனை போதாது என்று அஜித்தை தாக்கி பேசிவிட்டார் தயாரிப்பாளர் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.