நீதி ,சிறைச்சாலை அலுவல்கள் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட மறுசீரமைப்பு குறித்து இலங்கையில் உள்ள தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை சட்ட மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அடிப்படை மனித உரிமைகளை வலுப்படுத்துதல் மனித உரிமை ஆணைக்குழுவை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தென்னாப்பிரிக்க ஒத்துழைப்பை வழங்குவதுடன் ,சட்ட மறுசீரமைப்புக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க திட்டம் குறித்தும் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் தமது நாடு இது தொடர்பில் கொண்டுள்ள அனுபவங்கள் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னர் கைது செய்யப்பட்ட சிலர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 17 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை தொடர்பான மசோதாக்களை அங்கீகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.