புதரில் கிடந்த பிஞ்சு.. கொலை செய்யப்பட்ட தாய்.. திருச்சி ஜூயபுரத்தில் பகீர் சம்பவம்.! 

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜூயபுரம் பகுதியில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தபோவனப் பகுதியில் பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை ஒன்று வீறிட்டு அழுது கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் இது பற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை பெற்றெடுத்தவர் ஜூயபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது கலைவாணி என்பது தெரியவந்துள்ளது. திருமணமாகாத கல்லூரி மாணவியான கலைவாணி காதலனால் கர்ப்பமாகி குழந்தை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை அவர் வீசி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை பெற்ற அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து திருச்சியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலைவாணி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்தபோது கலைவாணியிடம் திருச்சி மாஜிஸ்திரேட் பெற்ற வாக்கு மூலத்தின் மூலம் பெற்றோர் கலைவாணிக்கு வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. 

கலைவாணியின் தந்தை செல்வமணி மற்றும் அவருடைய சகோதரி மல்லிகா இருவரும் சேர்ந்து கலைவாணியை பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.