யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்று (15) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 181 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டைச் சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி, கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வடக்கு கடற்படை பிரிவுக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டது. அங்கு, 04 பைகளில் 900 கிராம் பொதி செய்யப்பட்ட 181 கிலோ கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) ஒரு சந்தேகநபர் மற்றும் அங்கிருந்த டிங்கி படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 60 மில்லியன் ரூபாவாவுக்கும் அதிகம் என்றும் நம்பப்படுகின்றது.
மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.