குமபகோணம்: பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறையின் கலை திருவிழா ஒரு பகுதியாக நடைபெறும் ஓவியா கண்காட்சி, மாணவ மாணவிகளின் வெகுவாக கவர்ந்துள்ளது. கும்பகோணம் கவின்கலை சிற்பக் கல்லூரி முன்னால் மாணவர்கள் முன்னுற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓவியங்களை கொண்டு இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தனர்.
கடந்த 12 தேதி தொடங்கி 18 தேதி வரை நடை பெற்றுவரும் ஓவிய கண்காட்சி ஏராளமான மாணவ மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். ஆயில்கேன்வாஷ்பெயிண்ட், இக்ரலிக்கேன்வாஷ்பெயிண்ட், கடவுளின் உருவங்கள், தமிழர்வாழ்வின் வாழ்வியல் கலாச்சாரம் பண்பாடு சார்ந்த படைப்புகள், தத்துருவமாக வரைய பட்டுள்ளன.
பெருநகரிங்களை போல தங்களது ஊர்களிலும் ஓவிய கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெரம்பலூர் மாணவ மாணவிகள் தெரிவித்தனர் ஓவிய கண்காட்சியை ஒட்டி பெரம்பலூர் பேருந்து நிலைய சுவற்றில் வரைய பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள் பொது மக்களை கவர்ந்துள்ளது.