கத்தார் உலகக் கோப்பை… மூன்றாவது இடத்தை கைப்பற்றிய குரோஷியா

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது குரோஷியா.

ஜோஸ்கோ குவார்டியோல்

கத்தாரின் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

கத்தார் உலகக் கோப்பை... மூன்றாவது இடத்தை கைப்பற்றிய குரோஷியா | Qatar World Cup Seals 3Rd Place For Croats

@getty

இதனையடுத்து 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலை பெற்றது.
இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார்.

இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் குரோஷியா தடுப்பாட்டத்தில் தீவிரம் காட்ட எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

கத்தார் உலகக் கோப்பை... மூன்றாவது இடத்தை கைப்பற்றிய குரோஷியா | Qatar World Cup Seals 3Rd Place For Croats

@getty

2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி

மேலும், கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் வாய்ப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலகக் கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.

கத்தார் உலகக் கோப்பை... மூன்றாவது இடத்தை கைப்பற்றிய குரோஷியா | Qatar World Cup Seals 3Rd Place For Croats

@getty

அரையிறுதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட வீரர்களில் இரு அணிகளும் மாற்றம் செய்திருந்தன.
குரோஷியா 5 வீரர்களை புதிதாக களமிறக்கியதுடன், மொராக்கோ மூன்று வீரர்களை புதிதாக களமிறக்கியிருந்தது.

முதல் பாதியில் இரு அணிகளுக்கும் வெற்றிவாய்ப்பு சரிசமமாகவே இருந்துள்ளது.
ஆனால் அதன் பின்னர் மொராக்கோ அணி வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதுடன், குழப்பமான சூழலில் அட்டத்தை தொடர்ந்துள்ளது.

கத்தார் உலகக் கோப்பை... மூன்றாவது இடத்தை கைப்பற்றிய குரோஷியா | Qatar World Cup Seals 3Rd Place For Croats

@AFP

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.