அவதார் கதாபாத்திரங்களாக மாறிய தியேட்டர் ஊழியர்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த ஒரு படம் ‘அவதார்’. இப்படி ஒரு சயின்ஸ் – பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் – த வே ஆப் வாட்டர்’ படம் உலக அளவில் கடந்த 16ஆம் தேதி வெளியானது. தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் படம் வெளியாகியிருக்கிறது முதல் பாகம் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில் அவதார் 2 கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் அவதார் 1 வேறு உலகத்தில் இருந்ததுபோன்று இருந்தது. ஆனால் அவதார் 2 சராசரி சினிமா என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வேடம் அணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். மேலும் அவதார் போல் வேடம் அணிந்து உள்ளவர்களிடம் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

முன்னதாக அவதார் 2 படமா படத்தின் டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இன்றோடு மூன்று நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அளவில் கடந்த இரண்டு நாள்களில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி அவதார் 2 திரைப்படம் வெளியான இரண்டு நாள்களில் மட்டும் மொத்தம் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக திரைத்துறை வணிக ஆய்வாளரான ரமேஷ் பாலா ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

முன்னதாக, இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ. 41 கோடி வசூலித்த அவதார் 2, தற்போது ரூ. 100 கோடியை தாண்டி அசத்தியுள்ளது. மேலும், இந்த வார இறுதியில், ரூ. 135 கோடி முதல் ரூ. 140 கோடிவரை அவதார் 2 வசூலிக்க வாய்ப்புள்ளது என்றும், இதேபோன்று சென்றால், ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ. 300 கோடி வசூலித்து பெரும் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம், இந்தியாவில் இந்தாண்டு பெரும் வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர், பிரம்மாஸ்தரா படங்களின் முதல் இரண்டு நாள் சாதனையை அவதார் 2 திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.