ஆந்திராவில் அரசு உண்டு உறைவிட பள்ளியில் பெண் கணினி ஆபரேட்டருடன் தலைமை ஆசிரியர் உல்லாசம்: மாணவர்கள் எடுத்த வீடியோ வைரல்

திருமலை: ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணத்தில் உள்ள அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளியில் தலைமையாசிரியர் பெண் கணினி ஆபரேட்டருடன் உல்லாசமாக இருந்ததை மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகலப்புடி ரயில் நிலையம் அருகே அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில் மசூலிப்பட்டணம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் விடுதி அறையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்பாபு  இரவு நேரங்களில் பெண் கணினி ஆபரேட்டருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கவனித்த மாணவர்கள், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த தலைமை ஆசிரியர் மாணவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். சில மாணவர்கள் அடிக்கு பயந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், தலைமை ஆசிரியரின் உல்லாச வீடியோ சமூக வளைதளத்தில் வெளியானதால்  சிலகலப்புடி  போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.