நியூயார்க் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில், நியூயார்க் லாங் ஐலேண்ட் பகுதியில், டிக்ஸ் ஹில்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர், இந்திய வம்சாவளி பெண்ணான தன்யா பதிஜா, ௩௨. எம்.பி.ஏ., பட்டப் படிப்பு முடித்து தொழில்முனைவோராக இருந்த இவர், சமீபத்தில் அப்பகுதியில் கேக் கடை திறந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் தன் வீட்டில் இரவு துாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியது.
சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். அப்போது, வீட்டுக்குள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பயங்கரமாக தீ எரிந்தது.
இதனால், வீட்டுக்குள் துாங்கிக் கொண்டிருந்த தன்யா பதிஜாவை காப்பாற்ற முடியாமல் போனதால், அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது நாய் குட்டியும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் ௬௦ வீரர்கள் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement