பிரபல தமிழ் வர்த்தகர் படுகொலையை அடுத்து பொரளை மயான பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை


கொழும்பு – பொரளை மயானம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உடனடியாக சிசிடிவி கமராக்களை பொருத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு நேற்றைய தினம் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

தினேஸ் சாப்டர் படுகொலையின் எதிரொலி

அண்மையில் பொரளை பொது மயானத்தில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஸ் சாப்டர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இவ்வாறு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.

பிரபல தமிழ் வர்த்தகர் படுகொலையை அடுத்து பொரளை மயான பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Cctv Camera Fixing In Borella Cemetery

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற பகுதியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.