வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் போனிக்சில் இருந்து ஹோனலுலுவுக்கு நேற்று முன்தினம் ஹவாய் விமான நிறுவனத்தின் விமானம் சென்றது. இதில், 278 பயணியர், 10 ஊழியர்கள் இருந்தனர்.
ஹோனலுலு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமானம் திடீரென பலமாக குலுங்கியது. இருப்பினும் விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
விமானம் குலுங்கியதில், 36 பயணியர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காற்றால் விமானம் குலுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement