இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றிடமிருந்து அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடை
இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஆகியன இணைந்து 02 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.
இதற்கான காசோலை நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதற்கமைய, இலங்கை துறைமுக அதிகாரசபை 01 பில்லியன் ரூபாவையும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் 500 மில்லியன் ரூபாவையும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை 500 மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் டி. பெர்னார்ட், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.ஏ. ஜயகாந்த உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
President’s Media Division