கொரோனா நோயாளிகளும் பணி செய்யலாம்; சீனாவில் விநோதம்.!

கொரோனா தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதலே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் இது நாள் வரை ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு பகுதியான ஷின்ஜியாங் பிராந்தியத்தில் சுமார் 130 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. நாட்டில் உள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஷின்ஜியாங் பகுதியில் தான் அதிகநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள சுமார் 4 மில்லியன் குடியிருப்பு வாசிகள், 100 நாட்களுக்கு மேலாகவே வீட்டிலேயே முடங்கினர்.

அதேபோல் சீனாவின் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள், சுமார் 10 மில்லியன் பேர் இந்த பிராந்தியத்தில் தான் வசித்து வருகின்றனர். சீனாவில் சிறுபான்மையின உய்குர் முஸ்லிம்களுக்கு, அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுவதாகவும், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அதனால் நாடுமுழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கை திரும்ப பெறுக என்றும் அதிபர் ஷி ஷின்பிங்குக்கு எதிரான வாசகங்களை கொண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வ வல்லமை மிக்க தலைவராக கருதப்படும் ஷி ஷின்பிங், சீனா பிரதமராக பதவியேற்ற பின் நடக்கும் மாபெரும் போராட்டம் இதுவாகும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளியால் பரபரப்பு

அதைத் தொடர்ந்து சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு அனுசரிக்கப்பட்டது. மேலும் அன்று முதலே ஜீரோ கோவிட் பாலிசி கைவிடப்பட்டது. வணிக வளாகங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மையங்கள் குறைக்கப்பட்டன. இருப்பினும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

‘கொரோனா.. இனிமே அதுக்கு அவசியம் இல்லை’ – WHO நம்பிக்கை!

இந்தநிலையில் கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுவருவதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சாங்கிங், ஷெஷியாங் உள்ளிட்ட பல வர்த்தக மாகாணங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படையான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் தேவையில்லை என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.