பிரான்ஸ் வீரர் எம்பாப்பே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜேர்மன் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தங்க காலணி நாயகன்
உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்து, தங்க காலணி விருதை வென்ற பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே இன்று தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு வாழ்த்துக் கூறி பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எம்பாப்பே கோல் அடித்த தருணங்கள் மற்றும் குறும்புத்தனமான விளையாட்டு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2️⃣4️⃣ 🎉
Do you have a message for our Parisian? ⬇️💬 pic.twitter.com/e9rBJQcu2g
— Paris Saint-Germain (@PSG_English) December 20, 2022
மனங்களை வென்ற எம்பாப்பே
உலகக்கோப்பையை நழுவ விட்டாலும், மூன்று கோல்கள் அடித்து எதிரணி ரசிகர்கள் உட்பட அனைவரது மனதையும் எம்பாப்பே கவர்ந்தார்.
பிரான்ஸ் அணிக்காக 36 கோல்கள் அடித்துள்ள எம்பாப்பே, பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணிக்காக 118 கோல்கள் அடித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக்கோப்பையை வென்றபோது, எம்பாப்பே ஒரு கோல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@AFP