லண்டன்,:பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் படத்துடன் கூடிய புதிய கரன்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது, ௨௦௨௪ல் புழக்கத்துக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நீண்ட கால ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய மகன் சார்லஸ், ௭௪, நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.
பிரிட்டனில் உள்ள கரன்சி நோட்டுகளில், அரசாளும் மன்னர் அல்லது ராணியின் படம் இடம் பெறும். இதன்படி, நீண்டகாலமாக இரண்டாம் எலிசபெத்தின் படங்களுடன் கூடிய கரன்சிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது மன்னராக பொறுப்பேற்ற மூன்றாம் சார்லசின் படத்துடன் கூடிய புதிய கரன்சி நோட்டுகளை, அந்த நாட்டின் மத்திய வங்கியான ‘பாங்க் ஆப் இங்கிலாந்து’ நேற்று அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, ௫, ௧௦, ௨௦ மற்றும் ௫௦ பவுண்ட் மதிப்புள்ள கரன்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கரன்சிகள், ௨௦௨௪ன் மத்தியில் புழக்கத்துக்கு வரும் என, பாங்க் ஆப் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
புதிய கரன்சிகள் புழக்கத்துக்கு வந்தாலும், ஏற்கனவே உள்ள கரன்சி நோட்டுகளும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement