திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மாமண்டூரில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 16-ம் தேதி மர்மநபர்கள் சிலர், நள்ளிரவில் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு, அதன் வழியாக கடைக்குள் புகுந்து 250 மதுபாட்டில்களை கொள்ளையடித்து கொண்டு சென்றனர்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 3பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருத்தணியில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.