அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றோரு அணியும் செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.
தன்னால் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “எனக்கு சோதனை வந்தபோது என்னை தாங்கி பிடித்தது தொண்டர்கள். பல சோதனைகள் கண்ட கட்சி அதிமுக.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த கட்சியை சிற்பாக வழி நடத்தி சென்றார்கள்.
சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் அஇஅதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் திரு.பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், இன்று (21-12-2022) நடைபெற்றது. pic.twitter.com/8CI9aLEPIb
— O Panneerselvam (@OfficeOfOPS) December 21, 2022
ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மனம் எப்படி வந்தது?அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
ஓ.பி.எஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது, என்ன மணி (Money) அடித்தாலும் பப்பு வேகாது. எடப்பாடி பழனிசாமியே உனக்கு தைரியம் இருக்கா? அப்படி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார் கட்சியை கபளீகரம் செய்ய நினைத்தால் அது எப்போதும் நடக்காது” என்றார்.