#BigBreaking :: டாஸ்மாக் நிர்வாகம் சிக்கியது..!! யாரிடம்.. எவ்வளவு கொள்முதல்..!! முழு விவரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2015ம் ஆண்டு கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்வதன் மூலமாக கிடைத்த வருமானம் எவ்வளவு..? அதேபோன்று ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை எவ்வளவு..? மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எந்த மதுபானம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது..? போன்ற விவரங்களை கேட்டு டாஸ்மார்க் நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

டாஸ்மாக் நிர்வாகம் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் கடை வாடகை குறித்தான செலவு விவரங்களை மட்டுமே அளித்தது. ஆனால் மூன்றாம் நபர்களின் வர்த்தகம் தொடர்பான தகவலை அளிக்க இயலாது என்ற காரணத்தால் எந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விவரத்தை அளிக்க டாஸ்மார்க் நிர்வாக மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து லோகநாதன் 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுபான கொள்முதல் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு போட்டு ஒப்பந்த நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது “ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் டாஸ்மார்க் நிர்வாகம் விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.

ஏற்கனவே உத்தரவிட்டபடி எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விவரம் மற்றும் மதுபான நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகல் ஆகியவற்றை சீல்லிடப்பட்ட கவரில் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.