தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த், இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்லத வரவேற்பு இருந்துவருகிறது. படங்களில் எப்படி பிசியாக இருப்பாரோ அதேபோல சமூக வலைத்தளங்களிலும் இவர் படு ஆக்டிவாக இருப்பார். எவ்வித பயமுமின்றி தனது சமூக வலைதள பக்கங்களில் தனக்கு தோன்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை துணிச்சலோடு பதிவிடுவார். அடிக்கடி இவரது சமூக வலைதள பதிவுகள் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது.
சித்தார்த் தனது பெற்றோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சிஎஸ்ஐஎஃப்அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் இவர்களை ஹிந்தியில் பேச வற்புறுத்தியும், இதற்கு மறுத்ததால் கூட்டமே இல்லாத விமான நிலவியது சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர்களை காக்க வைத்து கடுமையாகவும் நடந்து கொண்டுள்ளனர்.
இதனை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “காலியான மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். வயதில் முதிர்ந்த என்னுடைய பெற்றோர்களின் பையிலிருந்த நாணயங்களை அகற்றுமாறு அவர்கள் வற்புறுத்தினார்கள். நாங்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேசும்படி வேண்டினோம், இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியிலேயே தான் பேசிக்கொண்டிருந்தனர்.
தங்களையும் ஹிந்தியில் பேச சொன்னதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம், அதற்காக அவர்கள் எங்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்கள். இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார்கள், வேலையில்லாதவர்கள் தான் அதிகாரம் காட்டுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்துகொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென கோரியுள்ளேன்” என்றார்.