சென்னை: “ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை; ஆண்டொன்று போனால் – வளர்ச்சி பல மடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை என்றும், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! […]
