
2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக
இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
நடத்தப்படாவிட்டால், அந்தத் தேர்தலுக்காக மக்களைத் திரட்டி போராடுவோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஜே.வி.பி.க்கு சவால் விடுக்கும்
அனைவரது சவால்களையும் முறியடித்து வெற்றியை பெறுவோம்.
மேலும் 2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும்
ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,