குண்டூர்: ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதித்து அம்மாநில அரசு இன்று (ஜன.,03) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த டிச.,மாதம் 29ம் தேதி நெல்லூர் மாவட்டம் கந்தகூர் என்னும் பகுதியில் தெலுங்கு தேச கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி தலைவர் சந்திரபாபு கலந்து கொண்டார். கூட்டத்தில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு எதிராக கண்டனம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து கூட்டம் முடிவில் அனைவரும் ஒன்று போல் கலைந்துசெல்ல முயற்சித்தனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் வரையில் பலியாகினர். இதனையடுத்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகையாக ரூ.10 லட்சம் அளிப்பதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சி சார்பில் கடந்த 1ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று பேர் வரை பலியாகினர். கடந்த ஒரு மாத காலத்திற்குள் ஒரு மாநில கட்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகும் சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதித்து அம்மாநில அரசு இன்று(ஜன.,03) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement