பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் எல்லையில் இரவு ஊரடங்கு அமல் | Terror attack echoes: Night curfew imposed on Kashmir border

ஸ்ரீ நகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் சம்பாவில் சர்வதேச எல்லையில் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதேபோல் மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊரடங்கு:

அதேபோல் குண்டு வெடிப்பில், இரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் சம்பாவில் சர்வதேச எல்லையில் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் துணை எஸ்.பி கூறுகையில், சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீ. பரப்பளவிற்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதனால், மக்கள் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம். அவசரகால பயணம் தேவையென்றால் செல்லும்போது, உடன் ஆவணங்களை எடுத்து செல்லும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த தடை உத்தரவு 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு வீரர்கள்:

அடர் பனியான சூழலில், ஆளில்லா விமானம் வழியே ஆயுத கடத்தல், பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் எல்லை பாதுகாப்பு வீரர்கள், தொடர்ந்து சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள உதவும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.