நயன்தாரா செய்த செயல் – நெகிழ்ந்துபோன மக்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர். இருந்தாலும் மனம் தளராத அவர் தொடர் உழைப்பின் காரணமாக தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்.

அந்தவகையில், அஷ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ், வினய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். படமானது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார் நயன். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.

இதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் தனது இரட்டை குழந்தைகளுடன் இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.