மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. காளைகளை கால்நடைத்துறையினர் பரிசோதித்து சான்றிதழ் வழங்கிய பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பயிற்சியளிக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.