நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலவச வீடுகள் ஜூலை மாதம் வரை மட்டுமே


போராட்டகாரர்களின் தாக்குதல் காரணமாக வீடுகள் உட்பட சொத்துக்களை இழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பத்தரமுல்லை வியத்புர வீடமைப்புத்  தொகுதியில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் வரை மாத்திரமே இலவசமாக தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை கொள்வனவு செய்த எம்.பிக்களுக்கு சந்தர்ப்பம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலவச வீடுகள் ஜூலை மாதம் வரை மட்டுமே | Free Housing For Mps Only Till July

இதன் பின்னர், அந்த வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தினால், வீடுகளுக்கான வாடகை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும். வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடொன்றின் மாத வாடகை சுமார் 70 ஆயிரம் ரூபா.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளை கொள்வனவு செய்ய விரும்பினாலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போராட்டகாரர்களின் தாக்குதல்கள் காரணமாக வீடுகளை இழந்த 82 எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலவச வீடுகள் ஜூலை மாதம் வரை மட்டுமே | Free Housing For Mps Only Till July

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஏற்கனவே அந்த வீடுகளை கொள்வனவு செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வீட்டின் விலை சுமார் இரண்டு கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டகாரர்கள் தாக்குதல்கள் மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் பொதுஜன பெரமுனவின் 82 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்களவினர் பத்தரமுல்லை வியத்புர வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளை தற்காலிகமாக இலவசமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.