காபூல்: ஆப்கானிஸ்தானில், பெண்கள் தங்களின் நோய்களுக்கு, ஆண் மருத்துவர்களை அணுகக்கூடாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது. பெண் மருத்துவர்களை மட்டுமே அணுகவேண்டும்; மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இதனை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, கல்வி, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, பயணம் ஆகியவற்றிலிருந்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
