சபரிமலை மகர விளக்கு பூஜை: 2வது நாளாக திருவாபரண பெட்டி ஊர்வலம்!

மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அனுபவிக்கப்படும் திருவாவாரண பெட்டிகள் ஊர்வலம் இரண்டாம் நாளாக இன்று தொடர்ந்தது. இன்றைய தினம், ஆரன்முளாவில் இருந்து பெருநாடு புறப்பட்டது.
சபரிமலையில் மகர சந்திரம பூஜை மற்றும் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திரு ஆபரணங்கள் அடங்கிய மூன்று பெட்டிகள் ஊர்வலமாக ஜனவரி 12ம் தேதி புறப்பட்டது.
பந்தளம் ஸ்ராம்பிகல் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளை தலைமையிலான குழுவினர் வலியகோயிகால் தர்மசாஸ்தா கோயிலுக்கு கொண்டு சென்றனர்.

image
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆபரணங்களை தரிசனம் செய்தனர். கோயிலில் சடங்குகளுக்குப் பின் ஊர்வலம் புறப்பட்டது. முதல் நாள் பாரம்பரிய திருவாபரன பாதை வழியாக குளநாடா, உள்ளன்னூர், ஆரன்முளா வழியாக அயிரூர் புத்திகாவ் கோயிலை அடைந்தது. அங்கிருந்து இரண்டாம் நாளான இன்று ஊர்வலம் பெருநாடு வழியாக புறப்பட்டு உள்ளது. வழிநெடுக்கிலும் திரளான பக்தர்கள் திருவாபரணத்தை தரிசித்து வழி அனுப்பி வைத்து வருகின்றனர்.

image
இன்று இரவு திருவாபரண ஊர்வலம் லாஹா வனத்துறைக்குட்பட்ட சத்திரத்தை அடையும். மூன்றாம் நாள், அதாவது நாளை ஜனவரி 14ம் தேதியன்று கானகப் பாதை வழியாக ஊர்வலம் செல்கிறது. பின் பிளாப்பள்ளியில் இருந்து அட்டதோடு, வலியானவட்டம், செரியானாவட்டம் வழியாக மாலையில் சபரிமலை சென்றடையும். ஐயப்பனுக்கு  திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு  தீபாராதனை நடைபெறும் போது பொன்னம்பலமேட்டில் மகரஜோதி ஒளிரும்.
80 கிலோமீட்டர் தொலைவு கால்நடையாக செல்லும் திருவாபரண ஊர்வலத்தில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ தேவைக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் முதலுதவி வசதிகள் அடங்கிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.