வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நம்மிடம் உள்ள ஒரே வாய்ப்பு சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) தான் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதை நாம் அறிவோம். இதனால், நாடு பல சிக்கல்களை சந்திப்பதை நான் அறிவேன். வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. பணவீக்கம் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரித்துவிட்டது. இதனால், மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. இலங்கை மக்கள் முன்பு அனுபவித்த சலுகைகள் குறைந்துவிட்டது. மோசமான பொருளாதார சூழ்நிலையானது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பாதித்துவிட்டது.
இவை அனைத்தும், பொருளாதார சரிவின் பின்விளைவுகள் இவை. இந்த பிரச்னைகளுக்கு அடிப்படை காரணங்களை பற்றி பேசுவதில் பயன் இல்லை. இவை ஏற்கனவே நடந்துவிட்டவை. இப்போது நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சர்வதேச நிதியத்தின் ஆதரவை பெறுவது தான். இல்லையென்றால், நம்மால் மீள முடியாது.

தற்போது நாம் கடன் மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடன் தொடர்பாக ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடன் வழங்கியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், ஏற்றுமதி சந்தை அடுத்தாண்டு குறையும். நமது சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement