புதுச்சேரி, ஜன. 15-
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி பூர்விகா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ‘பீட்பேக்’ போட்டி நடத்தி, பரிசு வழங்கி வருகிறது.
இந்தியாவின் முன்னணி டெக் விற்பனையாளராக பூர்விகா நிறுவனம் தொடர்ந்துள்ளது. 19 ஆண்டிற்கு முன் சென்னையில் துவங்கிய பூர்விகா தற்போது 475க்கும் மேற்பட்ட கிளைகளோடு ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.
பூர்விகாவின் மற்றொரு புதிய துவக்கம் பூர்விகா அப்ளையன்ஸ் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.
பூர்விகா நிறுவனம், பண்டிகை காலங்களில் சிறப்பு தள்ளுபடி மற்றும் பரிசுகள் வழங்கி வருகிறது.
இந்தாண்டு புத்தாண்டு, பொங்கலையொட்டி, கடந்த டிச., 31ம் தேதி முதல் வரும் 17 ம் தேதி வரை 18 நாட்கள் பூர்விகா பொருட்கள் வாங்குவோருக்கு பீட்பேக் போட்டி நடக்கிறது.
அதில் வெற்றி பெறும் 200 பேருக்கு தங்க காசு. தலா 90 பேருக்கு ஸ்மார்ட் போன், சவுண்ட் பார், டேப்லெட், ஸ்மார்ட் டிவி மற்றும் வெற்றி பெறும் 6 பேருக்கு லேப்டாப், 1,500 பேருக்கு கேஷ் வவுச்சர் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கி வருகிறது.
பூர்விகா நிறுவனம், பெரும்பாலான கெஜெட்டுகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 8 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 1 டவுன் பேமெண்ட், குறைவான இ.எம்.ஐ., என பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை பூர்விகாவில் வாங்கி www.poorvika.com என்ற இணையதளத்தில் பீட்பேக்குகளை சமர்ப்பித்து பரிசுகளை வென்று, பொங்கல் பண்டிகையை கொண்டாட பூர்விகா அழைக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement