பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 11 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இதில், 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்.,க்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்கு இருசக்கர வாகனமும், 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடும் வழங்கப்பட்டது.
மேலும், ஆளும் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுகவின் சின்னமான உதய சூரியன் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் வெற்றிப் பெற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்பட்டது.