சென்னை பெருங்குடியில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு திமுக நிர்வாகிகள் கையூட்டு பணம் கொடுத்துள்ளனர்.
இந்த பணத்தை போலீசார் பெற்றுக் கொண்டபோது யாரோ மறைவாக வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோவை கண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, துரைப்பாக்கம் காவல் நிலையத்தின் நுண்ணறிவு பிரிவு காவலரான கண்ணன், நுண்ணறிவு பிரிவிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.