ஒன்று கூடிய அரசியல் தலைவர்கள்: ஒரே பேனரில் அசத்திய திருமண வீட்டார், போட்டோ வைரல்

திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லையில் வைக்கப்பட்டுள்ள வினோத பேனரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே பேனரில் வைத்து திருமண வீட்டார் அசத்தியுள்ளனர். இந்த அசத்தல் பேனர் பேசுப்பொருளாகியுள்ளது.

விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் கோமான் இல்ல திருமண விழா நெல்லையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமண வீட்டார் சார்பில் அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக வைக்கப்பட்ட பேனர் அனைத்து மக்களையும் கவர்ந்து இழுத்தது. 

அதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வினோதமான பேனரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாரத பிரதமர் நரேந்திர மோடி, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தமிழகத் தலைவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

Tirunelveli: Wedding Banner with Photos of Political Parties Goes Viral

ஒரே பேனரில் பல்வேறு கோணங்களில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றவாறு அமைக்கப்பட்ட பேனர் நெல்லை மாவட்டம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tirunelveli: Wedding Banner with Photos of Political Parties Goes Viral

தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் முன்னாள் தலைவர்கள், தற்போதைய தலைவர்கள் என நாம் ஒன்றாக காண முடியாத பல அரசியல் தலைவர்களை இந்த பேனரில் ஒன்றாக காண முடிகின்றது. இந்த காரணத்தால் இந்த பேனர் பலரது கனவத்தை ஈர்த்துள்ளது. இந்த வினோத, வித்தியாசமான பேனர் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.