மகளிர் ஆணைய தலைவிக்கே பாலியல் தொல்லை; டெல்லி அவலம்.!

வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், புத்தாண்டு அன்று 20 வயதான அஞ்சலி சிங் என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை காரில் இழுத்துக் கொண்டே சென்ற நபர்கள், அஞ்சலி சிங் இருப்பதை மறந்து வேகமாக சென்றனர்.

காருக்கு அடியில் சிக்கிய அஞ்சலி சிங்கின் உடல்கள் நசுங்கின. இதில் அவர் உயிரிழந்தார். இது கூட தெரியாமல், அஞ்சலி சிங்கின் உடலுடன், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை அந்த நபர்கள் இயக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தலைநகர் டெல்லியில் போலீசாரின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்கு காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதையடுத்து சம்பவத்தன்று பணியில் இருந்த 11 போலீசார் சஸ்பெண் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது நுழைவு வாயிலுக்கு எதிரே இன்று அதிகாலை 3.11 மணியளவில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, கார் ஓட்டுனர் ஒருவர் மதுபோதையில் அவரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தடுக்க முயன்ற போது அவரை 10 முதல் 15 மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

இது குறித்து ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பதிவில்,”நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்றேன். அப்போது, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

அவரை பிடிக்க முயன்ற போது, காரின் ஜன்னலில் எனது கையை சிக்க வைத்து விட்டு, காருடன் என்னை இழுத்து சென்றார். டெல்லியில் மகளிர் ஆணைய தலைவரே பாதுகாப்புடன் இல்லை எனும்போது, சாதாரண பெண்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்,” என வேதனை தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இதுபற்றி பேசிய டெல்லி போலீஸ் அதிகாரி, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர்

ஹரீஷ் சந்திரா (47) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஸ்வாதி மாலிவால் தனது குழுவினருடன் சாலையோரம் நின்று கொண்டிருக்கும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

மூன்றாம் அணியின் முதல்படியில் காலை வைத்த கேசிஆர்; எதிர்கட்சிகள் ஆதரவு.!

மேலும் மகளிர் ஆணையத் தலைவியின் டிவிட்டர் பதிவை பகிர்ந்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், ‘‘மகளிர் ஆணையத் தலைவிக்கு பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு குண்டர்களின் மன உறுதி அதிகரித்துள்ளது. அரசியலமைப்பில், இந்த பணி மட்டுமே லெப்டினன்ட் கவர்னருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.