Love Shaadi Drama: திருமண வீடியோவை ஓடிடி தளத்தில் வெளியிடும் விஷயத்தில் நயன்தாராவை முந்திக் கொண்டுவிட்டார் ஹன்சிகா என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
ஹன்சிகாதனது பிசினஸ் பார்ட்னரும், நண்பருமான சொஹைல் கதூரியாவை காதலித்தார் ஹன்சிகா. தங்கள் காதலை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஹன்சிகா, சொஹைலின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் தான் அந்த திருமண வீடியோ ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.
திருமண வீடியோஹன்சிகா தன் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது தவிர்த்து வீடியோ எதையும் வெளியிடவில்லை. வீடியோவை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திடம் கொடுத்துவிட்டார். இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் ப்ரொமோ வீடியோவுடன் தெரிவித்துள்ளது.
ப்ரொமோ
ப்ரொமோ வீடியோவில் ஹன்சிகா சிவப்பு நிற உடையில் மிகவும் அழகாக உள்ளார். என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான ஒன்று நடந்திருக்கிறது. எனக்கு திருமணமாகிவிட்டது. என் திருமணத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் லவ், ஷாதி என ஹன்சிகா சொல்ல, டிராமா என ஒரு ஆணின் குரல் கேட்கிறது. இல்லை இல்லை இது லவ், ஷாதி என ஹன்சிகா மீண்டும் சொல்ல டிராமா என அந்த ஆண் குரல் மீண்டும் ஒலிக்கிறது. இது டிராமா இல்லை. கட் பண்ணுங்க, நான் எடிட்டை பார்க்கணும். வாட் தி ஃப… என ஹன்சிகா காண்டாகி கிளம்புவதுடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.
ப்ரொமோ View this post on Instagram A post shared by Hansika Motwani (@ihansika)
நயன்தாரா
ஹன்சிகாவுக்கு முன்பு நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். ப்ரொமோ வீடியோ கூட வந்தது. ஆனால் திருமண வீடியோ இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ வரவிருக்கிறது.
முந்திவிட்டார்லவ் ஷாதி டிராமா ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ, நயன்தாராவை ஹன்சிகா முந்திவிட்டாரே. நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். இனியாவது அவரின் திருமண வீடியோ வெளியாகுமா ஆகாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நயன்தாராவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் தாயானார்.
கெரியர்ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு தன் காதல் கணவர் சொஹைலுடன் தேனிலவுக்கு ஐரோப்பாவுக்கு சென்றார். அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். திருமதியான ஹன்சிகா தனது எம்.ஒய். 3 வெப்தொடரின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அதில் ரோபோவாக நடித்துள்ளார் ஹன்சிகா. இது தவிர்த்து கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.