மனோஜ்குமார் மஞ்சு – வருண் இணையும் “வாட் த ஃபிஷ்”

6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், இப்படத்திற்கு வித்தியாசமாக  ‘வாட் தி ஃபிஷ்’ ‘WHAT THE FISH’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. உலகத்தரத்தில்  அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை  மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.  மனோஜின்  இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்

ரசிகர்களுக்கு புதிய உலகைக் காட்டப்போகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

அனைவரும் ரசிக்கும் வண்ணம் உலகின் பல மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஒரு அதிசய உலகத்தை உங்கள் கண்முன் காட்டும் திரை அனுபவமாக இப்படம் இருக்கும். “வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் 6ix Cinemas தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.