நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுரேஷ், சிவராஜ், ஆய்வாளர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ராஜன் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்துடுத்து பெட்டிக்கடையின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தலா மற5000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோன்று டிங்கர்போஸ்ட், மஞ்சள்கொம்பை பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் இரண்டு கடைகளுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விகித்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.