புதுடெல்லி: தமிழகத்தில் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சுருக்கு மடி வலையை பொருத்தமட்டில் மற்ற மாநிலங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்பது தெரியவில்லை. இருப்பினும் தமிழகத்தில் கடல் வளம் மற்றும் லட்ணக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது‘ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த18ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.
