Vijay: 'அண்ணி பாவம்' பரவும் வதந்தியால் ட்ரோலாகும் விஜய்… தெறிக்கும் டிவிட்டர்!

நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் நெருக்கமாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோலாக்கி வருகின்றனர்.

நடிகையுடன் தொடர்பு
நடிகர் விஜய்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷும் நடிகர் விஜய்யும் பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது முதலே இருவருக்கும் இடையில் அப்படி இப்படி என கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையிலான கிசுகிசு உச்சத்தை எட்டியுள்ளது.
Vijay: பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்… லீக்கான போட்டோ!

விக்கிப்பீடியாவில் அதகளம்
நடிகர் விஜய் தனது மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டு கீர்த்தி சுரேஷைதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என அள்ளிவிட்டு வருகின்றனர் விஷமிகள். விக்கி பீடியாவில் யார் வேண்டுமானாலும் எந்த தகவலை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்பதால் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டார் என்றும் கீர்த்தி சுரேஷுடன் டேட்டிங்கில் உள்ளார் என்றும் கிளப்பி விட்டு வருகின்றனர்.
காதலி அதியா ஷெட்டியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல்!

நடிகையின் கட்டுப்பாட்டில்
நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என குரல்கள் ஒலித்து வரும் நிலையில் இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டு வருகின்றனர். இந்நிலையில் சோஃபாவில் அமர்ந்திருக்கும் நடிகை கீரத்தி சுரேஷ் தரையில் அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்யின் காலை மிதித்தப்படி இருக்கும் போட்டோவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷின் கட்டுப்பாட்டில்தான் நடிகர் விஜய் இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் ஷாப்பிங் போக வேண்டும் என்றால் விஜய்யிடம் கேட்டுவிட்டுதான் செல்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
Reshma Pasupuleti: திடீரென அந்த முடிவை எடுத்த ரேஷ்மா? சிலிர்க்க வைக்கும் க்ளிக்ஸ்!

அண்ணி பாவம் விஜய்ணா
இந்நிலையில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷின் போட்டோக்களை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அண்ணி பாவம், அண்ணிக்கு எப்படி விஜய்ணா துரோகம் செய்தீர்கள் என்றும் பழைய காமெடிகளை வைத்தும் எல்லை மீறி ட்ரோலில் ஈடுபட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் பெத்து வளர்த்த அப்பா அம்மைவையே தூக்கி எறிந்த விஜய்க்கு இதுவெல்லாம் சர்வ சாதாரணம் என்றும் கடுமையாக சாடி வருகின்றனர். அதோடு #JusticeForSangeetha என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து விஜய்யை கண்டப்படி திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
Rashmika Mandanna: என்னங்க பிரச்சனை? சினிமாவ விட்டு போகணுமா? நொந்து போன விஜய் ஹீரோயின்!

கவலையில் ரசிகர்கள்
மேலும் வாரிசு படத்தில் அஃபயர் இருந்தாலும் தப்பில்லை என்றும் சொல்லும் போதே நினைத்தேன், அதுவும் அந்த கேரக்டர் பெயர் சங்கீதா… என்றும் எப்படியெல்லாம் பேச முடியுமோ அப்படியெல்லாம் பேசி வருகின்றனர் நெட்டிசன்கள். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தை மனைவி மனைவி சங்கீதாவுடன் பார்த்து வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இந்நிலையில் மீண்டும் ஆதாரம் இல்லாத விஷயங்களை வைத்து நெட்டிசன்கள் விஜய்யை ட்ரோலாக்கி வருவது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. நடிகர் விஜய் குறித்தும் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்தும் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள், அவர்களும் மனிதர்கள் தான் என்று விளாசி வருகின்றனர்.

மீண்டும் காதலில் விழுந்த ஓவியா?

மை சன்…
கிசு கிசு
Vijay

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.