மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இன்று தெப்பத்திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு, அதிகாலையில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத […]
