அமெரிக்காவில் இந்தியரை கொன்ற மர்ம நபர்கள்| Mysterious people who killed an Indian in America

நியூயார்க்: அமெரிக்காவில், முகமூடி அணிந்த மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார்; இவரது மனைவி மற்றும் மகள் பலத்த காயமடைந்தனர்.

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த இந்தியர் பினால் படேல், ௫௦, இவரது மனைவி ரூபல்பென் படேல் மற்றும் மகள் பக்தி படேல் மூவரும், ஜன., ௨௦ம் தேதி பணியை முடித்துவிட்டு, தங்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார் நிறுத்தும் இடத்தில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள், துப்பாக்கியை காட்டி இவர்களை மிரட்டினர். அவர்களை பினால் படேல் துணிச்சலாக எதிர்த்துள்ளார். இதையடுத்து, மூவரையும் சரமாரியாக சுட்ட நபர்கள், தயாராக நின்ற காரில் ஏறி தப்பினர்.

போலீசார், மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி பினால் படேல் உயிரிழந்தார். காயமடைந்த மனைவி, மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலைக்கான நோக்கம் தெரியாத நிலையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இது, இந்த வாரத்தில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவமாகும். ஜன., ௨௨ல், சிகாகோவில் இந்திய வம்சாவளி மாணவர் தேவ்சிஷ் நந்தேபு சுட்டுக் கொல்லப்பட்டார்; பலத்த காயமடைந்த இவரது நண்பர் சாய் சரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்தியர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.