ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொளிக்கும் – செங்கோட்டையன் கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொளிக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு அசோகபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்…
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையில் கிழக்கு தொகுதி தேர்தல் பணி களத்தில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு தேர்தல்களை களம் கண்டவர்கள். இந்த பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். அதிமுக-வை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு அயராது பணிகளை செய்து வருகிறோம். களப்பணி என்பது வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளதாகவும் அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரண்டு முறை அழைத்து பேசி பகிர்ந்துள்ளார்.
image
வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் இந்த தேர்தல் செங்கோட்டை வியக்கத்தக்க அளவிற்கு எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டைக்கு ஒலிக்க இருக்கிறது. அதிமுக எத்தனை அணிகளாக பிரிந்திருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன்; மாடியில் இருந்து மக்களை பார்க்கிறார். ஆனால், அதிமுகவினர் மக்களோடு இருந்து மாடியை பார்க்கிறோம். வெற்றி என்பது லட்சியத்தின் இலக்காக உள்ளது. ஒவ்வொரு இயக்கத்தினரும் தங்களுக்கான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதாகவும் அனைத்தையும் பொதுச் செயலாளர் மூலம் அணுகி இருப்பதாகவும் நல்ல முடிவு வரும் என நம்பிக்கை உள்ளது. அதிமுக மெகா கூட்டணியுடன் இணைந்து பிரச்சார பணிகளை மேற்கொள்ள உள்ளது.
image
அதிமுக பொதுச் செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும் போது களம் இன்னும் வேகமாக இருக்கும். ஆதரவு கேட்ட கட்சிகளின் நிலைப்பாடு குறித்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தந்த இயக்கத்தினரும் பொதுச் செயலாளரும் அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். மக்களை பொருத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். வீடு வீடாகச் சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறுகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொளிக்கும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.