மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG

பிரான்சில் நடந்த PSG மற்றும் Reims அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.

நெய்மர் கோல்

பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் லீக் 1 தொடர் கால்பந்து போட்டியில் PSG – Reims அணிகள் மோதின.

முதல் பாதியில் கோல்கள் விழாததால் ஆட்டம் சமனில் இருந்தது.

அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் PSG -யின் மார்கோ வெரட்டி விதியை மீறி செயல்பட்டதால் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG | Reims Draw With Psg In Parc Des Princes

மறுமுனையில் Reims அணி வீரர்கள் பதில் கோல் அடிக்க போராடினர். ஆனால் மெஸ்சி, எம்பப்பே மற்றும் நெய்மரின் மும்முனை தாக்குதலால் அந்த அணியின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG | Reims Draw With Psg In Parc Des Princes

@REUTERS/Christian Hartmann

ஆட்டத்தின் 84வது நிமிடத்தில், கோல் அடித்திருந்த நெய்மருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார்.

90 நிமிடங்கள் முடிந்த பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது Reims அணி வீரர்கள் புயல் வேகத்தில் செயல்பட்டனர்.

அதிர்ச்சி கொடுத்த வீரர்

ஆட்டத்தின் நொடிகளில் லாவகமாக PSG-யிடம் இருந்து பந்தை பறித்துக் கொண்ட பலோகன், மின்னல் வேகத்தில் ஓடி அசாத்தியமாக கோல் அடித்தார்.

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG | Reims Draw With Psg In Parc Des Princes

கடைசி 30 நொடிகளுக்கு முன்பு வரை எப்படியும் PSG தான் வெற்றி பெறும் என்று நினைத்த ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG | Reims Draw With Psg In Parc Des Princes

@AFP

இறுதியில் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிப்பட்டியில் PSG முதலிடத்திலும், Reims 11வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG | Reims Draw With Psg In Parc Des Princes 

REUTERS/Christian Hartmann

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.