`ராஜராஜ சோழனின் மூத்த மருமகனே.. முதல்வரின் அண்ணனே’ – மதுரையில் மீண்டும் அழகிரி பிறந்தநாள் போஸ்டர்கள்

“உங்களை பின் தொடர்கிற தம்பிகளுக்குத் தெரியும். பொறுமையாக இருந்தாலும் வலுவிழக்காத புயல் நீ என்று.!”

வாழ்த்து போஸ்டர்

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அண்ணன் உடையான் தடைக்கு அஞ்சான்..”

“அகிம்சா வழியில் அன்பால் வென்ற அண்ணனே… அஞ்சாநெஞ்சரே..”

வாழ்த்து போஸ்டர்

“உரிமைகள் ஊமையாவதுமில்லை. சரித்திரங்கள் சாயம் போவதுமில்லை..”

இது ஆட்டோவின் பின்பக்கம் எழுதப்படுள்ள வாசகங்கள் அல்ல., மு.க.அழகிரி பிறந்தநாளுக்காக அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர்களில் படைத்துள்ள காவியங்கள். இதுதான் மதுரையின் இன்றைய பேசுபொருள்…!

வாழ்த்து போஸ்டர்

தென்மண்டல அமைப்பு செயலாளராக, மத்திய அமைச்சராக இருந்த காலகட்டங்களில் மதுரை குலுங்க குலுங்க நடத்தப்பட்ட மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சுருதி குறைந்து வந்தது.

இதற்கு அவர் வசமிருந்த தீவிர ஆதரவாளர்கள் பலர் இடம்பெயர்ந்து ஸ்டாலின் பக்கம் போனதும், எடுத்த முய்சிகள் அனைத்தும் தோல்வியானதால் அப்செட்டாகி ஓரம்கட்டி இருந்ததும் ஒரு காரணம்.

வாழ்த்து போஸ்டர்

இந்த நிலையில்தான் திரைப்பட ட்விஸ்ட் போல சமீபத்தில் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியை சந்தித்து ஆசி வாங்கி சென்றார். ‘என் தம்பி மகன்’ என்று உச்சி மோர்ந்து அழகிரி வாழ்த்தினார்.

அந்த நிகழ்வுக்கு பின்பு அழகிரியின் ஆதரவாளர்கள் ரொம்ப உற்சாகமாகிவிட்டார்கள். அதன் காரணமாகத்தான் இந்தாண்டு பிறந்த நாளுக்கு விதவிதமான வாசகங்களுடன் ஏகப்பட்ட போஸ்டர்கள் மதுரையில் தென்படுகின்றன.

வாழ்த்து போஸ்டர்

எந்த ஒரு விளம்பரத்தையும் நின்று நிதானமாக ரசிக்கும் மதுரைக்காரர்கள் இப்போது அழகிரியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள ஒவ்வொரு போஸ்டரையும் பார்த்து ரசிப்பதுதான் முழுநேர வேலயாகியுள்ளதாம்.

வாழ்த்து போஸ்டர்

அது மட்டுமின்றி, பிறந்த நாளில், முக்கிய ஆதராவளர்களான பி.எம்.மன்னன், முபாராக் மந்திரி, எம்.எல்.ராஜ் உள்ளிட்டோர் எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.