இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பாடி பிரபலமடைந்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம். 78 வயதாகும் வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வாணி ஜெயராம் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டுசென்றனர். தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படுக்கை அருகில் […]
