ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக கடிதம் அனுப்பி ஒப்புதல் பெரும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மேற்கொண்டு வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, அதிமுகவிற்கு (எடப்பாடி பழனிச்சாமி) பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஜக தோழமைக் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று, திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் எம்பி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் இன்று ‘இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர்’ பாரிவேந்தர் எம்பி செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இருப்போம் (இந்திய ஜனநாயக கட்சி) என்றும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
‘இந்திய ஜனநாயக கட்சி’யின் தலைவராக இவரின் மகன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.