இம்ரான் கான் மரண சிறைக்கு அனுப்பபடுவார்; பாகிஸ்தான் அமைச்சர் காட்டம்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார்.

சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இதனிடையே, பிரதமர் இம்ரான்கானை பதவிநீக்கம் செய்வதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இம்ரான் கானுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார். இதற்கிடையே ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அதை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் பாகிஸ்தானில் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராக இருக்கும்படி தனது தொண்டர்களுக்கு இம்ரான் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இம்ரான் கான் இனி போராட்டத்தில் ஈடுபட்டால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனாயுல்லா தெரிவித்துள்ளார்.

ஈரோடு -குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வழி விடாமல் சென்ற கார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொதுத்தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்துவதை எதிர்த்தும், தனது கட்சியினரை போலீஸார் துன்புறுத்துவதற்கு எதிராகவும் பேசிய இம்ரான் கான், ‘‘‘ஜெயில் பரோ தெஹ்ரீக்’ என்ற எனது அழைப்புக்காக மக்கள் தயாராகி காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொண்டர்கள் அனைவரையும் அடைக்க பாகிஸ்தான் சிறைகளில் அவ்வளவு இடம் இருக்காது’’ என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தலிபான்களின் அட்டூழியத்தை அடக்க.. ஆப்கான் தலிபான் உதவியை நாடும் பாக். அரசு!

அதற்கு எதிர்வினையாற்றிய உள்துறை அமைச்சர், ‘‘2014 இல், இம்ரான் கான் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பயணத்தை நிறுத்த முயற்சித்தது. இம்ரான் கான், தேர்தல் தேதியை காரணம் காட்டி இஸ்லாமாபாத்திற்கு சீல் வைத்து, நீண்ட பேரணிகள் வடிவில் போராட்ட அரசியலை பின்பற்றி வருகிறார். இனி இம்ரான் கான் புதிதாக போராட்டத்தை தொடங்கினால், அவர் நான் கைது செய்யப்பட்ட போது நான் வைக்கப்பட்டிருந்த அதே மரண சிறை அறைக்கு அனுப்பப்படுவார்’’ என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.