காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவில் உள்ள சின்ன அழிசூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்திரன் – ரேவதி. இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இருளர் சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரேவதி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். நேற்று காலை 8 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
சுகப் பிரசவம்உடனே அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக ரேவதியை அனுமதித்தனர். மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதியை பரிசோதித்து பிரசவத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். காலை 10.15 மணி அளவில் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் எடை 2.9 கிலோ கிராம். இந்த குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தது.
வழக்கமாக குழந்தை பிறந்த உடன் அழுவதை தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரேவதிக்கு பிறந்த குழந்தை வெளியே வந்த உடன் ”நான் வந்துட்டேன்” என பேசியதாக சொல்லப்படுகிறது. குழந்தை பேசியது செவிலியர், தூய்மை பணியாளர், தாயின் உறவினர் உள்ளிட்ட அனைவருக்கும் கேட்டுள்ளது. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒருவேளை பிரசவ அறை அருகில் யாராவது நின்று இருக்கிறார்களா? என்று பார்த்தனர்.
பிறந்த குழந்தை பேசியதா?அப்படி யாரும் இல்லை. பிறந்த குழந்தை தான் பேசியதா? என பெரும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த குரல் குழந்தையிடம் இருந்து தான் வந்ததாக கூறியுள்ளனர். இந்த பேச்சால் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்துள்ளனர். சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை சில வார்த்தைகள் பேசிய செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த கிராமம் முழுவதும் தீயாய் பரவியுள்ளது.
அந்த குழந்தையை உறவினர்களும், கிராம மக்களும் ஆச்சரியத்துடன் வந்து குழந்தையை பார்த்து செல்கின்றனர். அதேசமயம் குழந்தை எப்படி பேசும்? ஒருவேளை அழுததை அல்லது முணகியதை அப்படி புரிந்து கொண்டார்களா? என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் பிரசவத்தின் போது அங்கிருந்த மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர், தாயின் உறவினர் என அனைவருக்கும் ஒரே மாதிரியான வார்த்தைகள் எப்படி கேட்டிருக்கும்?
மருத்துவர் விளக்கம்அதுவும் பிறந்த குழந்தையிடம் இருந்து வார்த்தைகள் வந்ததா? எனக் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை. இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கூறுகையில், வழக்கமாக குழந்தை பிறந்த உடன் அழும். இப்படி பேசி பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. பிரசவத்தின் நான் அங்கில்லை. இது நம்பத்தகுந்ததாக இல்லை எனக் குறிப்பிட்டார்.
புராண காலத்தில் தாயின் வயிற்றில் கர்ப்பத்தின் போது கதைகளை கேட்டு பிரகலாதன் மற்றும் அபிமன்யு போன்றவர்கள் பிறந்ததும் தனது வாழ்விலும் அப்படி செயல்பட்டதாக கேள்விப்பட்டிருப்போம். அதுபோல இந்த நவீன காலத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.