ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சிலர் மது அருந்திய விவகாரம்: விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ஆனைக்குட்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அமர்ந்து சிலர் மது அருந்திய வீடியோக்கள் வெளியான நிலையில், இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனைக்குட்டம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்த வெளியூரில் இருந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அலுவலகத்தில் தங்கிக் கொள்ள ஊராட்சிமன்றத் தலைவர் அனுமதி வழங்கியதாக கூறப்படும் நிலையில், பணி முடிந்ததும் அவர்கள் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து மது அருந்தியதை அக்கிராமத்து இளைஞர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.