Trisha, Leo: ப்ளீஸ், விஜய்யை பற்றிய அந்த உண்மையை சொல்லிடுங்க த்ரிஷா

Thalapathy Vijay: விஜய் பற்றிய அந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் வரை சும்மா இருக்க முடியாது என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

லியோமாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜும், விஜய்யும் சேர்ந்து பணியாற்றும் படம் லியோ. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவருக்கு ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்த த்ரிஷா நடித்து வருகிறார். முன்னதாக சென்னையில் நடந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவர் மனதிலும் கேள்வி எழுந்தது.
சிரிப்புத்ரிஷா ஏதோ சொல்ல தளபதி விஜய் வெட்கப்பட்டு சிரித்த புகைப்படம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. விஜய் அந்த அளவுக்கு வெட்கப்பட்டு க்யூட்டாக சிரிக்கும் அளவுக்கு த்ரிஷா என்ன தான் சொல்லியிருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் தான் தளபதி ஏன் அப்படி வெட்கப்பட்டு சிரித்தார் என்கிற உண்மையை சொல்லுங்கள் த்ரிஷா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
த்ரிஷாபூஜையின்போது விஜய்யின் தோள் மீது த்ரிஷா தலை வைத்தது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. அந்த காட்சி மிகவும் க்யூட்டாக இருந்தது. விஜய், த்ரிஷா இடையேயான நட்பை காட்டுகிறது என்கிறார்கள் ரசிகர்கள். 14 ஆண்டுகள் கழித்து விஜய்யும், த்ரிஷாவும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். அதனாலும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

வதந்தித்ரிஷா சந்தோஷமாக லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் லியோவில் இருந்து விலகிவிட்டார். அதனால் படப்பிடிப்பு நடக்கும் காஷ்மீரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டார் என பேச்சு கிளம்பியது. த்ரிஷா லியோவில் இருந்து விலகவில்லை. அவர் காஷ்மீரில் தான் இருக்கிறார் என அவரின் அம்மா உமா விளக்கம் அளித்தார்.

​Leo, Trisha:லியோவில் இருந்து த்ரிஷா விலகிட்டார்னு பேச்சு கிளம்பியது ஏன்னு தெரியுமா?

ரீட்வீட்Leo, Trisha: ஒரு வீடியோ, ஒரு ரீட்வீட்: லியோ சர்ச்சையை முடித்து வைத்த த்ரிஷாஉமா விளக்கம் அளித்தும் அந்த பேச்சு அடங்கியபாடில்லை. இதையடுத்து லியோ தொடர்பாக சன் மியூசிக் சேனல் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்தார் த்ரிஷா. மேலும் சன் மியூசிக்கின் ட்வீட்டை ரீட்வீட் செய்தார். இதன் மூலம் தான் லியோ படத்தில் இருந்து விலகவில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் த்ரிஷா.

டான்ஸ்லியோ படத்தில் விஜய்யும், த்ரிஷாவும் சேர்ந்து ஒரு பாடலுக்காவது டான்ஸ் ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் படத்தில் டூயட்டுக்கு வாய்ப்பே இல்லையே ராஜா என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். விஜய் ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.